இஸ்ரோவின் கனவு திட்டம் 'ஆதித்யா எல்1' - சூரியனை நோக்கி ஓர் பயணம்..!

Update: 2023-04-07 11:59 GMT

சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வரும் ஜனவரியில் ஆதித்யா எல்1 என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை நாசாவுடன் இணைந்து இஸ்ரோ செய்து வருகிறது. ஜனவரியில் ஸ்ரீ ஹரி கோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி-சி 56 ராக்கெட்டில் ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தங்களை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சூரியனில் ஏற்படும் மாற்றங்களை எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து ஆய்வு செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த செயற்கைக்கோளில் 6 பேலோடுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள சோலார் அப்சர்வேட்டரி மூலம் உருவாக்கப்பட்ட "உயர் ஆற்றல் L-1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டரானது" ஆதித்யா-எல்1 செயற்கைக்கோளில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. இந்த "ஹீலியோஸ்" என்பது அடுத்த தலைமுறை ஸ்பெக்ட்ரோமீட்டர்... இது சூரியன் மாறும் நிகழ்வுகளை கண்காணிக்கும். ஆதித்யா-எல்1 மிஷன் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கனவு திட்டமாகும். சூரியனை ஆராயும் இந்தியாவின் முதல் பணி இது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்