வடமாநிலத்து சாக்லேட் இப்படி தான் இருக்குமா?சாக்லேட் வடிவிலான 250 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சாக்லேட் வடிவிலான 250 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்த வழக்கில், தப்பியோடிய முக்கிய குற்றவாளி வடமாநிலத்தை சேர்ந்தவர் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தெரிவித்துள்ளார். மேலும் ஈரோடு மாவட்டத்தில் வட மாநிலத்தவர்கள் குட்காவை பதுக்கி விற்பனை செய்வதாகவும், வட மாநிலத்தவர்களை அழைத்துவரும் ஏஜென்ட்டுகளிடம் இருந்து பட்டியல்கள் பெறப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.