வந்தே பாரத் ரயில் மீது மோதும் கால்நடைகளை தடுக்க, இரும்பு வேலிஅமைக்கும் பணி தொடங்கியது

Update: 2023-01-26 09:09 GMT

வந்தே பாரத் ரயில் மீது கால்நடைகள் மோதி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் இரும்பு வேலி அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் சேவை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், வந்தே பாரத் ரயில் மீது அடிக்கடி கால்நடைகள் மோதி விபத்துக்குள்ளானது. இதனை தடுக்கும் விதமாக மும்பை - அகமதாபாத் வரையிலான ரயில் பாதைக்கு அருகில் 622 கிலோமீட்டர் தொலைவிற்கு இரும்பு வேலி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

சுமார் 245 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பணிகள் நடைபெறுவதாக மேற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்