அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு குறித்த விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைவுப்படுத்தியுள்ளனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணையை விரைவுபடுத்தியுள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் போக்குவரத்து துறையில் கடந்த 2014 முதல் 2015 வரை பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர், நடத்துனர் உள்பட சுமார் 1500 பேரிடம் சம்மன் அனுப்பி விசாரிக்க தீவிரம் காட்டி வருகின்றனர் . கடந்த ஒரு மாதத்தில்
150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று சென்னை அடையாறு, அயனாவரம் பணிமனைகளை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் விசாரணைக்கு ஆஜராகினர் . அவர்களிடம் பணியமர்த்தப்பட்டது எப்படி? சமர்பித்த ஆவணங்கள் என்ன? பணி நியமனம் விதிகளுக்கு உட்பட்டு நடந்ததா? என விசாரித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வாக்குமூலம் பெற்றதாக கூறப்படுகிறது.