ஃப்ரிட்ஜ் வெடித்ததில் இன்ஸ்பெக்டர், பெண் பலியான சம்பவம் - கீழ் தளத்தில் இருந்த பெண் மாடிக்கு சென்றது ஏன்? - தீவிர விசாரணையில் போலீசார்

Update: 2023-03-10 13:57 GMT

பொள்ளாச்சி அருகே ஃப்ரிட்ஜ் வெடித்ததில் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் ஒருவர் பலியான சம்பவத்தில் பல்வேறு கோணங்களில் சந்தேகம் எழுந்திருக்கும் நிலையில் போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சபரிநாத் தன் சொந்த ஊரான பொள்ளாச்சி அருகே நல்லூருக்கு சென்ற போது திடீரென ஃப்ரிட்ஜ் வெடித்ததில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அவர் வசித்த வீட்டின் கீழ் தளத்தில் இருந்த சாந்தி என்ற பெண்ணும் விபத்தில் பலியானதாக சொல்லப்பட்ட நிலையில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த அன்று வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை அறிந்த சாந்தியின் சகோதரர் கணேஷ் சுப்ரமணியம் நேரில் சென்று பார்த்து அவரே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சபரிநாத்தின் மனைவி ராஜேஸ்வரி 2 வருடங்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரின் மருத்துவ செலவுக்காக 20 லட்ச ரூபாய் வரை கடன் இருந்ததாக தெரிகிறது. தற்போது சபரிநாத்துக்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரின் முடிவுக்கு இதெல்லாம் காரணமா? கீழ் தளத்தில் இருந்த சாந்தி மேலே சென்றது ஏன்? என்பது குறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்