கார் விற்பனையில் உச்சம் தொட்ட - இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனம்

Update: 2023-06-04 14:57 GMT
  • இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸூகி இந்தியாவின் கார்கள் விற்பனை, 2022 மே மாதத்தில் 1.24 லட்சமாக இருந்து 2023 மே மாதத்தில் 1.43 லட்சமாக, 15.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • இரண்டாம் இடத்தில் உள்ள ஹூண்டாய் மோட்டார்ஸின் விற்பனை அளவு 2022 மே மாதத்தில் 42,293ஆக இருந்து, 2023 மே மாதத்தில் 48,601ஆக 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • மூன்றாம் இடத்தில் உள்ள டாடா மோட்டார்ஸின் விற்பனை அளவு 2022 மே மாதத்தில் 43,341ஆக இருந்து, 2023 மே மாதத்தில் 45,878ஆக 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • நான்காம் இடத்தில் உள்ள மகிந்திரா அண்ட் மகிந்திராவின் விற்பனை அளவு 2022 மே மாதத்தில் 26,904ஆக இருந்து, 2023 மே மாதத்தில் 32,886ஆக 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • ஐந்தாம் இடத்தில் உள்ள டொயோட்டா கிர்லோஸ்கரின் விற்பனை அளவு 2022 மே மாதத்தில் 15,510ஆக இருந்து, 2023 மே மாதத்தில் 19,379ஆக 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • ஆறாம் இடத்தில் உள்ள கியா இந்தியாவின் விற்பனை அளவு
  • 2022 மே மாதத்தில் 18,718ஆக இருந்து, 2023 மே மாதத்தில் 18,766ஆக கால் சதவீதம் அதிகரித்துள்ளது.
  • ஏழாம் இடத்தில் உள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் விற்பனை அளவு 2022 மே மாதத்தில் 8,188ஆக இருந்து, 2023 மே மாதத்தில் 4,660ஆக 43 சதவீதம் சரிந்துள்ளது.
  • எட்டாம் இடத்தில் உள்ள எம்.ஜி இந்தியாவின் விற்பனை அளவு 2022 மே மாதத்தில் 4,008ஆக இருந்து, 2023 மே மாதத்தில் 5,006ஆக 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்