நிலாவை குறிவைத்த இந்தியா.. வெளியாகப்போகும் முக்கிய தகவல்கள் - பெரும் குழப்பத்தில் உலக நாடுகள்...

Update: 2023-06-17 03:10 GMT

சந்திராயன் 3 விணகலத்தை ஜூலையில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பு அலசுகிறது.

சந்திரனில் விண்கலங்களை தரையிறக்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, சந்திராயன் திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 2003ல் தொடங்கியது.

2008 அக்டோபரில், பி.எஸ்.எல்.வி எக்ஸ் எல் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட சந்திராயன் 1 விண்கலம், சந்திரனில் நீர் இருப்பதை கண்டு பிடித்து, வரலாறு படைத்தது.

2019 ஜூலையில் எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட சந்திராயன் 2 சந்திரனின் சுற்று வட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்தது. ஆனால் சந்திரனில் தரையிறங்கும் போது, கட்டுப்பாடு இழந்து விழுந்து நொறுங்கியதால், திட்டம் தோல்வியடைந்தது.

இதைத் தொடர்ந்து சந்திராயன் - 3 விண்கலம், மேலும் அதிக வலுவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஜூலை 12ல் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு மொத்தம் 615 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. 3,900 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3ல் ஒரு ரோவர் வாகனத்தை உள்ளடக்கிய லேண்டர் கலம் மற்றும் ஒரு உந்து கலம் ஆகியவை உள்ளன.

சந்திரனில் பாதுகாப்பான முறையில் தரையிறங்கி, ரோவர் வாகனம் மூலம் சந்திரனின் தரை தளத்தை ஆராயவும், விஞ்ஞான பரிசோதனைகள் மேற்கொள்வதும் இத்திட்டத்தின் நோக்கமகும்.

சந்திராயன் -3 ல் உள்ள லேண்டர் கலத்தில் 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. சந்திராயன் - 2 ல் அமைக்கப்பட்ட லேண்டர் கலத்தின் கால்களை விட இதன் கால்கள் அதிக பலம் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே சந்திரனில் லேண்டர் கலங்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. இந்தியாவின் முயற்சி வெற்றி பெற்றால், இந்த பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா இணையும்.

Tags:    

மேலும் செய்திகள்