"மின்வெட்டால் மக்கள் தொகை அதிகரிப்பு" - மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை...
- காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் வழங்கப்படாததாலே மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்ற மத்திய அமைச்சரின் பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
- மே மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் கர்நாடகாவில் பிரசாரம் செய்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரசின் இலவச மின்சாரம் வாக்குறுதியை விமர்சனம் செய்தார்.
- காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரமே வழங்கப்படவில்லை எனக் கூறிய பிரகலாத் ஜோஷி, பிரதமர் மோடி ஆட்சியிலே கிராமங்களில் 24 மணி நேர மின்சாரம் கிடைக்கிறது என்றார்.
- காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் வழக்கப்படாததாலே, மக்கள் தொகை அதிகரித்தது எனவும் விமர்சனம் செய்தார்.
- இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இது முட்டாள்தனமான கருத்து எனவும், தோல்வி முகம் தெரிவதால் நிலையை இழந்து மத்திய அமைச்சர்கள் இவ்வாறு பேசுகிறார்கள் எனவும் விமர்சித்திருக்கிறார்.