"எல்லை பிரச்சினையில் பிரதமர் மெளனம் காப்பதால் சீனா அட்டகாசம் செய்கிறது" - காங். எம்பி காட்டம்
பிரதமர் மோடி தனது அரசியல் இமேஜை காப்பாற்றிக் கொள்வதற்காக, எல்லை பிரச்சினையில் அமைதி காப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
இந்திய - சீன வீரர்களுக்கு இடையேயான மோதல் காரணமாக, எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இதன் காரணாக, இந்திய - சீன எல்லையில் பாதுகாப்பு பணிக்காக வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எல்லைப் பிரச்சினையில் தூங்கிக் கொண்டிருக்கும் பாஜக அரசை எழுப்ப, காங்கிரஸ் முயற்சித்ததாகவும், ஆனால், பிரதமர் மோடி தனது அரசியல் இமேஜை தக்கவைத்துக் கொள்வதற்காக, இந்த விசயத்தில் கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசு மெளனம் காப்பதால், சீனாவின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.