ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆர்.சி. புத்தகங்கள் மாயம்- 5 அதிகாரிகள் சஸ்பெண்டு - போலீசார் அதிரடி விசாரணை

Update: 2022-08-17 16:23 GMT

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய வாகனபதிவிற்கான 37 ஸ்மார்ட் கார்டுகள் மாயமான விவகாரத்தில், ஐந்து அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேற்கு தாம்பரத்திலுள்ள தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து, கடந்த வியாழனன்று புதிய வாகன பதிவுக்கான 37 ஸ்மார்ட் கார்டுகள் மாயமானது. இதனையடுத்து அந்த அலுவலகத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் என 5 பேரை பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். வரும் வெள்ளிக்கிழமைக்குள் தொலைந்து போன ஸ்மார்ட் கார்டுகளை கண்டுபிடித்து தராவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே ஸ்மார்ட் கார்டுகள் மாயமானது குறித்து தாம்பரம் போலீசாரும் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்