இன்ஸ்டா காதலனை தேடி வந்த காதலி.. அழைப்பை துண்டித்த கொத்தனார் காதலன் - ட்விஸ்ட் கொடுத்த பெண்ணின் கணவன்
திண்டுக்கல் அருகே இன்ஸ்டாகிராம் காதலனை தேடி புறப்பட்டு வந்த, கேரள பெண்ணை, வெளிநாட்டில் இருந்து அவரது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மீட்டு சென்றனர்.
கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், சமித் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலமாக மாறியுள்ளது. இதில் சமித், தான் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் உள்ள நூற்பாலை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் சமித்தை தேடி அந்த இளம்பெண், கேரளாவில் இருந்து புறப்பட்டு வேடசந்தூருக்கு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சமித், பேசுவதை நிறுத்தியதோடு செல்போன் அழைப்பையும் துண்டித்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 3 மாதமாக அந்த இளம்பெண் வேடசந்தூர் பகுதியிலேயே சுற்றித்திரிந்துள்ளார். இதனிடையே வெளிநாட்டில் வேலைபார்க்கும் அந்த இளம்பெண்ணின் கணவர், அங்கிருந்தபடியே போலீசில் புகாரளித்துள்ளார். இதனடிப்படையில் வேடச்சந்தூர் போலீசாரின் உதவியுடன், இளம்பெண்ணை மீட்ட கேரள போலீசார், அவரை சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். இளம்பெண்ணை ஏமாற்றிய சமித்திற்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும், கொத்தனார் வேலை செய்து கொண்டு, கேரளாவில் வசித்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.