"இல்லம் தேடி கல்வி திட்டம் - ஐ.நா.வில் பேசப்பட்டுள்ளது" - சட்டப்பேரவையில் அமைச்சர் பெருமிதம்
- சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அவர், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் திமுக அரசு 34 ஆயிரத்து 579 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில், நடப்பாண்டில் 40 ஆயிரத்து 299 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- ஐ.நா.சபையில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து பேசப்பட்டு இருப்பதாக கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ், சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ், இதுவரை நம்ம ஸ்கூல் திட்டத்திற்காக 68 கோடியே 48 லட்சம் ரூபாய் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
- ஆசிரியர்களை இந்த அரசு கைவிடாது என்றும், ஆசிரியர்கள் நலனில் இந்த அரசு அக்கறை கொண்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
- மேலும் பத்தாயிரத்து 143 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.