இனி வேகமாக பைக் ஓட்டினால்..- நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2022-11-28 17:29 GMT

வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை வகுக்க கோரியும், உரிய அனுமதியின்றி இரு சக்கர வாகனங்களை மாற்றியமைப்பதை தடுக்கக் கோரியும், தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 5 ஆண்டுகளில் இரு சக்கர வாகனங்களை வேகமாக இயக்கியது, வாகனங்களின் வடிவத்தை மாற்றியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,

வாகனங்களை வேகமாக இயக்குவதால் விபத்துகள் அதிகரித்து வருவதாகவும், இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு, 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்