"கொரோனா தடுப்பூசி போட்ட உடனே சுயநினைவே போச்சு.." - கதறும் தந்தை

Update: 2022-09-12 06:55 GMT

நெல்லையில் கொரோனா தடுப்பூசி போட்டதால் தனது 15 வயது மகள் சுய நினைவு இல்லாத அளவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.நெல்லை பருத்திப்பாட்டை சேர்ந்த கூலித் தொழிலாளியான மகாராஜனுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த இளைய மகள் நல்லதாய்க்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. தற்போது, அவர் சுய நினைவின்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டதால்தான் தனது மகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக மகாராஜன் குற்றம்சாட்டியுள்ளார். தனது மகளைக் காப்பாற்றித் தரும்படியும் அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்