“பட்டம் வாங்க இப்ப மகன் இல்ல“ - மேடையில் கண்ணீர் விட்ட தாய்... கண்கலங்க வைத்த பட்டமளிப்பு விழா

Update: 2023-05-01 02:44 GMT

நாகையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், நடந்த பட்டமளிப்பு விழாவில், விபத்தில் உயிரிழந்த மாணவரின் பெற்றோர் சான்றிதழை பெற்று சென்றது பார்வையாளர்களின் மனதை கரைய செய்தது.

நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை (தனியார்) பொறியியல் கல்லூரியின் 22 - வது பட்டமளிப்பு விழா அக்கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், 1933 இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அப்போது பட்டத்தினை பெற மேடை ஏறிய அக்கரைப்பேட்டையை சேர்ந்த கண்ணன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர், பட்டம் பெற தனது மகன் இல்லையே என கண் கலங்கி நின்றனர். பின்னர் கண்ணீரோடு தனது மகனுக்கான பட்டத்தினை அவர்கள் இருவரும் பெற்றுக் கொண்டனர். அக்கரைப்பேட்டையை சேர்ந்த கண்ணனின் மகன் தினேஷ் கடந்த 2021 ஆம் ஆண்டு மீன் பிடிக்க சென்ற போது , படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்