கணவனுக்கு சவக்குழி வெட்டிய மனைவி.. காணா பிணமாக்கிய விபரீத ஆசை.. நம்பி வீட்டுக்குள் விட்டதால் உயிர் பறித்த எமன்
- புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் என்கிற அனில். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, லுார்துமேரி என்ற மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளன. செல்வி ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார்.
- கடந்த மாதம் 29ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்ற ஞானசேகரன், வீடு திரும்பவில்லை. கணவரை காணவில்லை என அரியாங்குப்பம் காவல் நிலையத்தில், கடந்த மாதம் 30ம் தேதி லுார்துமேரி புகார் அளித்தார்.
- அதனைத் தொடர்ந்து, ஞானசேகரனை காணவில்லை என்கிற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் அவரை தேடி வந்தனர்.
- இந்த நிலையில், ஞானசேகரின் தந்தை சந்திரன், தனது மகனை, மருமகள் லூர்துமேரி தான் ஏதேனும் செய்திருக்கக் கூடும் என, காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
- அதனைத் தொடர்ந்து, ஞானசேகரன் காணாமல் போன வழக்கை, அதிரடி சிறப்பு படைக்கு மாற்றி, காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
- அதன்படி, சிறப்பு அதிரடி படை போலீசார் லூர்துமேரியை காவல்நிலையம் வரவழைத்து, தங்களது பாணியில் விசாரணை நடத்தினர்.
- அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஞானசேகரனும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த செல்வம் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். செல்வத்துடன் லுார்துமேரிக்கு பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியுள்ளது. இதை அறிந்த ஞானசேகர், மனைவி லூர்துமேரியை கண்டித்துள்ளார். இருப்பினும் செல்வம் லுார்துமேரியின் தகாத உறவு தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
- இதனிடையே, கள்ளத்தொடர்புக்கு இடையூறாக உள்ள ஞானசேகரனை கொலை செய்ய செல்வமும், லுார்துமேரியும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த மாதம் 29 ஆம் தேதி, செல்வத்தின் நண்பரான பாலாஜி என்பவர்,
- இடையார்பாளையம் சுண்ணாம்பாறு - சங்கரபரணி ஆற்றங்கரை அருகே சந்தன மரம் உள்ளதாகவும், அதனை வெட்டி கொடுத்தால் அதிக பணம் தருவதாகவும் கூறி, ஞானசேகரனை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த செல்வம், ஞானசேகரனை, கத்தியால் வெட்டி, கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்து, பின்னர், முன்னதாகவே தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் புதைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
- அதனை தொடர்ந்து லூர்துமேரி, செல்வம், அவரது நண்பர் பாலாஜி ஆகியோரை கைது செய்த போலீசார், ஆற்றங்கரை ஓரமாக புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் கண்டு, ஞானசேகரன் உடலை தோண்டி எடுத்தனர். தொடர்ந்து அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அழுகிய உடலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- ஞானசேகரின் உடலை தோண்டி எடுக்கும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள், செல்வம் மற்றும் பாலாஜியை தாக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.