மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஆணை வந்தும் பணம் வராததால் வீட்டின் கட்டுமான வேலைகள் பாதியில் நிற்பதாக, கணவரை இழந்த பெண் வேதனை தெரிவித்துள்ளார்...
தென்காசி மாவட்டம் ஆலங்குலம் அம்பை சாலை பகுதியைச் சேர்ந்தவர் மணிமுத்து. கணவரை இழந்த இவர், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மானியம் பெற 2021ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். தொடர்ந்து கையில் இருந்த சேமிப்பை கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு மானியத்திற்கான ஆணை கிடைத்துள்ளது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மானிய பணம் கிடைக்காத நிலையில், வீட்டை கட்டு முடிக்க முடியாமல் மணிமுத்து தவித்து வருகிறார். இதற்கான புகார் தெரிவித்தும் பேரூராட்சி தரப்பில் உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.