ஓசூர் அருகே 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பியதால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள், தெப்ப திருவிழா நடத்தினார்கள். டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் பெய்த கனமழையால் நிரம்பியுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடனும் வாழ வேண்டி, கங்கம்மா தேவியை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அமரவைத்து, ஏரி முழுவதும் கொண்டு சென்று வழிபட்டனர். இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.