சொந்த ஊரில் ஈ.பி.எஸ்... குடும்பத்துடன் சுவாமி தரிசனம் | Edappadi palanisamy
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான கோனேரிப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் குடும்பத்தோடு சுவாமி தரிசனம் செய்தார். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலுள்ள பயணியர் மாளிகையில் ஈபிஎஸ் அதிமுக நிர்வாகிகளை சந்தித்தார். அதன் பின்னர் தனது சொந்த ஊரான கோனேரிப்பட்டியிலுள்ள காளியம்மன் கோவிலில் மனைவி ராதா, மகன் மிதுன்குமார் ஆகியோருடன் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.