பாக். உள்ளிட்ட 155 நாடுகளில் சேகரிக்கப்பட்ட புனித நீர்... வேகமெடுக்கும் அயோத்தி ராமர் கோயில் பணிகள்

Update: 2023-04-08 02:42 GMT

பாகிஸ்தான் உள்ளிட்ட 155 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரைக் கொண்டு, குழந்தை ராமர் சிலைக்கு வரும் 23ஆம் தேதி அபிஷேகம் செய்யப்பட உள்ளது.

புண்ணிய ஸ்தலமான அயோத்தியாவில், பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி வேக வேகமாக நடைபெற்று வருகிறது. 50 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மாத‌த்திற்குள் பணியை முடித்து, ஜனவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 'ராம்ல‌ல்லா' எனப்படும் குழந்தை ராமர் சிலைக்கு வரும் 23ஆம் தேதி அபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பாகிஸ்தான் உட்பட உலகில் உள்ள 155 நாடுகளில் உள்ள புண்ணிய ஆறுகள் மற்றும் கடல்களில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது. 23ஆம் தேதி உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குழந்தை ராமர் சிலைக்கு நீர் அபிஷேகம் செய்ய உள்ளார். இந்த பிரம்மாண்ட விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்