தி காட்ஃபாதர் படத்தின் மூலம் பிரபலமடைந்த ஹாலிவுட் நடிகர் அல் பசீனோ, தனது 83வது வயதில் நான்காவது குழந்தைக்கு தந்தையாகிறார். இதுவரை 3 பெண்களை திருமணம் செய்து விவகாரத்து செய்த அல் பசீனோவுக்கு ஏற்கனவே, ஒவ்வொரு மனைவி மூலமாகவும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவரது 29 வயது காதலி கர்ப்பமாக உள்ளார் எனவும், இன்னும் 2 மாதங்களில் நான்காவது குழந்தைக்கு அவர் தந்தையாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.