13 மாநிலங்களை சுற்றி வந்த ஹாக்கி 'உலகக்கோப்பை'

Update: 2022-12-26 02:21 GMT

ஹாக்கி உலகக்கோப்பை தொடருக்கான வெற்றிக்கோப்பை ஒடிசா மாநிலம் சென்றடைந்தது. ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் ஜனவரி 13ஆம் தேதி புவனேஸ்வரில் தொடங்கும் நிலையில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு, கேரளா உட்பட 13 மாநிலங்களுக்கு உலகக்கோப்பை கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து ஒடிசாவிற்கு கொண்டு செல்லப்பட்ட வெற்றிக்கோப்பையை ஹாக்கி சம்மேளன் திலீப் திர்கி உற்சாகமாக வரவேற்றார். அடுத்த 4 வாரங்களுக்கு ஒடிசாவின் 30 மாவட்டங்களுக்கு கோப்பை கொண்டு செல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்