நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய, பதிவுச் சட்ட காலவரம்பு தடையாக இல்லை என்ற உயர் நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்...
அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
தீர்ப்புகளை பதிவு செய்ய மறுக்கும் பதிவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை பாயும் எனவும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை...
தீர்ப்புகளை பதிவு செய்யும் போது வழக்கின் மதிப்பு அடிப்படையில் மட்டுமே பதிவுக்கட்டணம் வசூலிக்கவேண்டும் - உயர் நீதிமன்றம்...
சொத்து மதிப்பில் பதிவுக்கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது எனவும் அறிவுறுத்தல்...
நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய மறுத்த சார் பதிவாளர் ஆணையை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...