அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்கு - ஈபிஎஸ் -க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Update: 2023-02-23 15:00 GMT
  • அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்கு
  • ஈபிஎஸ் -க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 

  • நெடுஞ்சாலை துறையில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதில் முன்னாள் முதலமைச்சர் ஈபிஎஸ்க்கு தொடர்பு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.
  • இது, தமது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக‌க் கூறி, ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ஈபிஎஸ் குறித்து பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்தார்.
  • இதை எதிர்த்து அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனங்களை ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.
  • இந்த தடை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும், அதனால், தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த‌து. மேலும், மனு குறித்து ஈபிஎஸ் தரப்பு பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
Tags:    

மேலும் செய்திகள்