அ.தி.மு.க திருத்தப்பட்ட விதிகளை ஏற்றதற்கு எதிராக ரிட் மனு - ஈ.பி.எஸ் -க்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-05-04 11:26 GMT

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து, கட்சியின் திருத்தப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பா. ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புருஷிந்திர குமார், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்