அமெரிக்காவின், டாலஸ் மற்றும் டெக்சாஸ் நகரங்களில் பெய்து வரும் கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டாலஸ் நகரில் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். இதில் வாகனங்கள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.