தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை - களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழு
தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புக் குழு களமிறங்குகிறது.
தேனி, திண்டுக்கல், நீலகிரி, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு தலா 1 குழு விரைகிறது.
வெள்ளம் மற்றும் இடிபாடுகளிலிருந்து மக்களை மீட்பதற்கான உபகரணங்கள் தயார்.
அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களையும் தேசிய பேரிடர் குழு எடுத்துச் செல்லும்.
கனமழையை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவதாகவும் தகவல்.