Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-08-2023) | Morning Headlines | Thanthi TV
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்... இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்...
- டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார், உள்துறை அமைச்சர் அமித்ஷா... மணிப்பூர் விவகாரம் குறித்து, இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் இன்று முறையிடும் நிலையில், அவசரமாக சந்தித்ததால் பரபரப்பு...
- ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது... பாடல்கள் ஹிட்டான நிலையில், டிரைலர் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
- நான்கு மணி நேரத்தில், 52 வயது பெண்ணை 25 வயது மணப்பெண்ணாக மாற்றிய அழகு கலை நிபுணர்... கேரளாவில் வைரலாகும் வீடியோ...