ஹாத்ரஸ் பாலியல் வழக்கு.. 2020ல் கைதான பத்திரிகையாளருக்கு ஜாமின்

Update: 2022-09-09 09:15 GMT

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான செய்திகளை சேகரித்த கேரள பத்திரிகையாளர்

சித்திக் காப்பன் உத்தரபிரதேச காவல்துறையினரால் கடந்த 2020, அக்டோபர் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சித்திக் காப்பனின் ஜாமீன் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது.

இதற்கு எதிராக சித்திக் காப்பன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

சித்திக் காப்பன் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபில் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், சித்திக் காப்பனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆறு வாரங்களுக்கு டெல்லியில் தங்கி இருக்கவும், அதன் பிறகு கேரளத்து சென்று உள்ளூர் காவல் நிலையத்தில் உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்