பீதியை கிளப்பும் H1N1 காய்ச்சல் - 53 வயது பெண் மரணம்

Update: 2022-09-26 10:32 GMT

நாமக்கல்லைச் சேர்ந்த 53 வயது பெண் எச்1 என்1 வைரஸ் காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள வெங்கடேசபுரியை சேர்ந்தவர் 53 வயது பெண் சரோஜா. இவர் 2 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த செப்டம்பர் 19 அன்று, மீண்டும் காய்ச்சல் அதிகமானதால் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எச்1 என்1 காய்ச்சல் இருப்பது உறுதியானது. தொடர்ந்து சரோஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் மல்லசமுத்திரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து மருத்துவ முகாம் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்