ஜிம் பயிற்சியாளர் ஜஸ்டின் விக்கி barbell தூக்கும் போது அதிர்ச்சி... அதிக எடையை தாங்க முடியாமல் தடுமாறி கழுத்து முறிந்து இதய நரம்புகள் பாதித்து உயிரிழப்பு

Update: 2023-07-23 06:47 GMT

உடற்பயிற்சி பயிற்சியாளர் ஓருவர் barbell பயிற்சியின் போது, கழுத்து முறிந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... சம்பவத்தின் பின்னணியை விளக்குகிறது இந்த தொகுப்பு

ஜிம் உடற்பயிற்சியாளர் barbell-ன் எடையை தாங்க முடியாமல் திணறிக்கொண்டிருக்க, சடக்கென அவரது கழுத்து முறியும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் அதிவேகமாக பரவி வருகின்றது....

இந்தோனேசியாவைச் சேர்ந்த 33 வயதான ஜஸ்டின் விக்கி ஒரு ஜிம் பயிற்சியாளர். மேலும் barbell தூக்கும் வீரராக இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று தான் வழக்கமாக செல்லும் பாலியில் உள்ள ஜிம்மிற்கு சென்றவர் அங்கு barbell தூக்கும் பயிற்சியை மேற்கொண்டிருந்தார். அப்போது 210 கிலோ எடையை தூக்க முயற்சித்திருக்கிறார். ஜிம் உதவியாளர் ஒருவரும் அவர் பின்புறம் நின்று கொண்டிருக்க, பளுவை தூக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் விக்கியால் சரியாக எடையை தோள்களில் வைத்து சமநிலை படுத்த முடியவில்லை.

ஒரு கட்டத்தில் நின்று கொண்டிருந்த விக்கி, பின்னோக்கிய படி சாய்ந்து கீழே அமர்ந்து விட, உதவிக்கு இருந்தவர் தூக்கிவிட முயற்சி செய்தார். ஆனால் 210 கிலோ எடை கொண்ட அந்த barbell அப்படியே விக்கியின் கழுத்தை முறித்து முன்னோக்கி உருண்டு விழுந்தது. அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். கழுத்து உடைந்து, இதயத்திற்கு செல்லும் முக்கிய நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் ஜஸ்டின் விக்கியை மருத்துவர்களால் காப்பற்ற முடியவில்லை.

இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அவரது இறப்புக்கு அஞ்சலிகள் குவிந்து வருகின்றன. அவர் பயிற்சி செய்த ஜிம்மிலும் பலரும் அவருக்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். barbell தூக்குவது நல்ல உடற்பயிற்சிதான் என்றாலும், முன்பே உடலை சீராக தயார் படுத்தி கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தக் கூடும் என்றும், இதயத்திற்கு செல்லும் நரம்புகளை நேரடியாகவே பாதிக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்