குரூப்-4 தேர்வு முடிவுகளில் குளறுபடியா? - தேர்வர்கள் குற்றச்சாட்டு

Update: 2023-03-26 02:48 GMT
  • தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10,100 பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள், 8 மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டன.
  • 18 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வின் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், முடிவுகளைப் பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
  • ஏனெனில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள், ஒட்டுமொத்த தரவரிசையில் கீழ்நிலையில் இருப்பதும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் உயர்நிலையில் இடம் பெற்று இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
  • எந்தவொரு தேர்வு நடந்தாலும், சரியாக எழுதாதவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதும், சரியாக எழுதியவர்கள் பாதிக்கப்படுவதுமான போக்கு தொடர்ந்து நடைபெறுவதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
  • இந்த குளறுபடிகளை சரி செய்து, சரியான முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்