ஆளுநர் கடிதம்.. "மக்களை திசை திருப்ப அரங்கேற்றிய நாடகம்" அமைச்சர் மனோ தங்கராஜ் பரபரப்பு
ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி போட்ட உத்தரவை திரும்பப் பெற்றிருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட மத்திய அரசின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப அரங்கேற்றிய நாடகம் இது என விமர்சித்துள்ளார்.