பிரதமர் படத்துடன் சிலிண்டர் விலையையும் சேர்த்து அச்சடித்த தெலங்கானா அரசு

Update: 2022-09-03 11:46 GMT

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நியாய விலை கடைகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு பிரதமர் மோடி புகைப்படம் இல்லாதது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி கேட்டதுடன், உடனடியாக பிரதமரின் படத்தை வைக்கக் கோரி அறிவுறுத்தினார்.

இதனால் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் ஒரு ஆட்டோவில் சிலிண்டர்களை ஏற்றி அதில் பிரதமர் மோடி படத்துடன் சிலிண்டர் விலையையும் சேர்த்து அச்சடித்து ஒட்டி வீதி வீதியாக எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்