சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார் கோத்தபய ராஜபக்ச
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச, சிங்கப்பூரில் இருந்து வெளியேறியுள்ளார். இலங்கையில் நடந்த மக்கள் போராட்டங்களால், அங்கிருந்து வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச, சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். இந்நிலையில், சிங்கப்பூரில் அவரது விசா காலம் நிறைவடைந்தது. விசா காலத்தை நீட்டிக்க முடியாது என சிங்கப்பூர் அரசு தெரிவித்ததை தொடர்ந்து, கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து வெளியேறி உள்ளார். இதனிடையே, தாய்லாந்திற்கு அவர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.