ஃபின்லாந்தில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தியுள்ளார். ஃபின்லாந்தின் கோர்டேன் நகரில் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதலில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, முதல் முயற்சியில் 86 புள்ளி 69 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி ஏறிந்தார். அதே நேரத்தில் மழை பெய்ததால், அடுத்தடுத்த முயற்சிகளில் ஈட்டி எரிய முடியவில்லை. எனினும், மற்ற வீரர்களால் அவரது இலக்கை எட்ட முடியாததால், நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பிறகு பங்கேற்ற முதல் போட்டியிலேயே நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.