சிறுவர்கள் கழுத்தில் கத்தி வைத்து 43 சவரன் நகைகள், ரூ.18 லட்சம் பணம் கொள்ளை
வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவர் தன் மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று திடீரென முகமூடி அணிந்தபடி வந்த 5 பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்த சிறுவர்கள் உள்ளிட்டோரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளே நுழைந்தது. பின்னர் பீரோவில் இருந்த 43 சவரன் நகை, 18 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றது. இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக செல்போன்களையும் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையரைத் தேடி வருகின்றனர்.