'GO CORONA.. GO CORONA..' கொரோனா நோய் தாக்காமலிருக்க பக்தர்கள் செய்த விசித்திர பிரார்த்தனை

Update: 2023-04-10 07:27 GMT

சிவகாசியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் போது தங்களது வேண்டுதல்கள் நிறைவேற மாரியம்மனை மனதார நினைத்து வணங்கி வழிபடும் பக்தர்கள் தங்களின் பல்வேறு நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான9 ம் நாளன்று கயர்குத்து திருவிழா அதிவிமர் சையாக நடைபெற்றது. அப்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களும் தங்களது உடம்பில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, மாறுவேடங்கள் தரித்து கைகளில் வேப்பிலை ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு சென்று கொரோனா நோய் தாக்கத்திலிருந்து விடுபட வேப்பிலை படுக்கையில் உருண்டெழுந்து அம்மனை வணங்கி வழிபட்டனர். அதே போன்று பொங்கலிட்டும், அக்னிசட்டி எடுத்து கயர் குத்தியும், முடி காணிக்கை, முத்து காணிக்கை செலுத்தியும், மாவிளக்கு எடுத்தும், தவழும்பிள்ளை நேர்த்திக்கடன் போன்ற அருள் கூட்டும் செயல்பாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், 12ம் தேதி புதன்கிழமை காலை ரதம் வடம் தொடுதல் நிகழ்ச்சியை அடுத்து அன்றைய தினம் மாலை தேரோட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்