"இந்த சவுண்ட் போதுமா கண்ணு.." - திருவிழாவில் பசங்களையே திரும்பி பார்க்க வைத்த GIRLS

Update: 2023-05-26 03:03 GMT

திருவாரூர் தியாகராஜர் கோயிலில், 3 நாள் தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி பார்வதி சமேத கல்யாணசுந்தரர் தெப்பத் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் கமலாலய குளத்தில் 50 அடி நீள அகல தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும், அம்பாளுக்கும் தீபாராதனை காட்டப்பட்டு, தெப்பத் திருவிழா நடைபெற்றது. திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் சாரூ ஸ்ரீ மற்றும் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்