"உறுப்பினரை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை"-உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..!
- கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் வழங்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு வாதிட்டுள்ளது.
- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.
- அப்போது வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஓபிஎஸ்-யை கட்சியில் இருந்து நீக்கும் போது கட்சியின் சட்ட விதிகளை பின்பற்றவில்லை என்பதை தனி நீதிபதி ஒப்புக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
- உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு வழங்கப்படவில்லை எனக் வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்,
- உரிய நடைமுறையை பின்பற்றவில்லை என வழக்கு தொடர்ந்ததற்காக, உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக எப்படி கூற முடியும் என கேள்வியை எழுப்பினார்.
- கட்சியில் இருந்து நீக்கியதால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாமல் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஓபிஎஸ் எதிர்க்கொண்டிருப்பதாகவும் வாதிட்டார். இன்று வெள்ளிக் கிழமையும் ஓபிஎஸ் தரப்பு வாதாடவுள்ளது