15 நாட்களாக இயங்காமல் நிற்கும் குப்பை வண்டிகள் - நோய்த்தொற்று பரவும் என மக்கள் வேதனை
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிமன்ற தலைவர், நிதி வரம்பிற்கு மேல் தன்னிச்சையாக செலவு செய்துள்ளதாக கூறி, அவர் காசோலைகளில் கையெழுத்திட மாவட்ட ஆட்சியர் தற்காலிக தடை விதித்தார்.
இதனால் கடந்த 15 நாட்களாக குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக அப்பகுதியில் ஏராளமான குப்பைகள் தேங்கி உள்ளதால், நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.