இந்த வயதினருக்கு இனி ஆணுறைகள் இலவசம்..பிரான்ஸ் அரசின் அதிரடி திட்டம்..!
இந்த வயதினருக்கு இனி ஆணுறைகள் இலவசம்..பிரான்ஸ் அரசின் அதிரடி திட்டம்..!
18 வயது முதல் 25 வயதுடையவர்களுக்கு, இலவசமாக ஆணுறைகள் வழங்கும் திட்டத்தை பிரான்ஸின் மேக்ரான் அரசு அறிவித்துள்ளது. பால்வினை நோய்கள் பரவல் மற்றும் விருப்பமில்லாமல் கர்ப்பம் தரிப்பதை தடுக்க, இதை பிரான்ஸ் அரசு முன்னெடுத்தள்ளதாக கூறியுள்ளது. 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு இலவசமாக கர்ப்பத் தடுப்பு மாத்திரைகளை வழங்கும் திட்டத்தை பிரான்ஸ் அரசு ஏற்கனவே அமல்படுத்தியுள்ளது. 2021இல் பிரான்ஸில் பால்வினை நோய்கள் பாதிப்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.