நண்பனை ஸ்கெட்ச் போட்டு கடத்திய நண்பர்கள்... கொலை மிரட்டலில் முடிந்த பல வருட 'நட்பு'
- சங்கரன்கோவிலை சேர்ந்த ராஜசிவம், நிர்மல் ராஜ், பேச்சிமுத்து உட்பட 5 பேர் நண்பர்கள் ஆவர்...
- ராஜசிவம் தனது நிர்மல் ராஜின் காரை சில மாதங்களுக்கு முன்பு வாங்கிச் சென்று விபத்து ஏற்பட்டு, பிறகு அதை சரி செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
- ஆனால் முறையாக சரி செய்யவில்லை என கூறி, நண்பர் என்றும் பாராமல் ராஜ சிவத்தை நிர்மல்ராஜ், பேச்சிமுத்து உட்பட 4 பேர் காரில் கடத்திச் சென்று பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்...
- இது தொடர்பாக ராஜ சிவத்தின் உறவினர்கள் காவல் துறையில் புகாரளித்த நிலையில், போலீசார் அவரை பத்திரமாக மீட்டு நிர்மல்ராஜ், பேச்சுமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
- மேலும் கடத்தல் வழக்கில் தொடர்புடைய கணேஷ், பொன்ராஜ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
- அத்துடன் இச்சம்பவத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி கோவிலாங்குளம் காவல் நிலைய எழுத்தர் அருணாச்சலத்தை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி உத்தரவு பிறப்பித்தார்.