வேட்டைக்கு சென்ற இளைஞரை கொன்று புதைத்த நண்பர்கள் - பகையும் இல்லை.. திட்டமும் இல்லை ..

Update: 2022-07-10 06:00 GMT

வேட்டைக்கு சென்ற இளைஞரை கொன்று புதைத்த நண்பர்கள் - பகையும் இல்லை.. திட்டமும் இல்லை ..

கேரளாவில் பழங்குடி இளைஞரை துப்பாக்கியால் சுட்டு, வனப்பகுதியில் புதைத்த நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பைசன்வாலி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். பழங்குடியினத்தை சேர்ந்த இவர், நண்பர்களுடன் கடந்த 27 ஆம் தேதி காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றுள்ளார். நண்பர்கள் வீடு திரும்பிய நிலையில், மகேந்திரன் வீடு திரும்பவில்லை. மகேந்திரன் வழிமாறி சென்றிருக்கலாம் என்ற நண்பர்கள் கூறியதை அடுத்து, பழங்குடியின மக்கள் காட்டுக்குள் தேடி வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராஜாக்காடு போலீசார் விசாரித்து வந்தனர். சந்தேகத்தின்பேரில், மகேந்திரன் நண்பர்கள் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். வேட்டையாடுவதற்காக கையில் இருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டபோது, தவறுதலாக மகேந்திரன் உடலில் பட்டதால் பலியானதாகவும், வெளியே தெரிந்தால் பிரச்சினை வரும் என்பதால் வனப்பகுதியில் குழிதோண்டி மகேந்திரனை புதைத்தும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்