ரஷ்யாவில் படிக்கும் மாணவர்களை கூறி வைத்து மோசடி..40 பேரிடம் ரூ.1.5 கோடி கைவரிசை

Update: 2023-06-07 02:49 GMT

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மஞ்சுதர்ஷிணி என்பவர், ரஷ்யாவின் சிம்பர்போலில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருகிறார். ரஷ்ய நாட்டு விதிமுறைகளின்படி கல்லூரி கட்டணத்தை ரஷ்ய ரூபிளாக செலுத்த வேண்டும் என்பதால், அதே கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கவியரசு என்பவரை, மஞ்சுதர்ஷிணி நாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த குழந்தை அந்தோணி ராஜா மூலம் இந்திய பணத்தை, ரஷ்ய ரூபிளாக மாற்றி தருவதாக கவியரசு தெரிவித்துள்ளார். அதன்படி கவியரசு மூலம் 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணத்தை மஞ்சுதர்ஷிணி அனுப்பியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் பணத்தை தராமல் காலம் தாழ்த்திய நிலையில், குழந்தை அந்தோணி ராஜ் பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பாக மஞ்சுதர்ஷிணியின் தாயார் ராணி அளித்த புகாரின் பேரில், குழந்தை அந்தோணி ராஜாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், 40 மாணவர்களிடம் அவர் ஒன்றரை கோடி ரூபாய் வரை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்