மக்களுக்கு உதவுவது போல் மோசடி..ATM-ல் நடந்த பகீர் சம்பவம்..புதுக்கோட்டை அருகே பரபரப்பு
புதுக்கோட்டையில், ஏ.டி.எம். மையத்தில் மோசடியாக பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். திருமயம் அருகே பொன்னமராவதியில் செயல்படும் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாமல் தடுமாறும் பொதுமக்களுக்கு உதவி செய்வது போல், ஏ.டி.எம். கார்டை மாற்றி மர்ம நபர்கள் பணம் திருடுவதாக புகார் எழுந்தது. இதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிய மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமாரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பலரிடம் மோசடி செய்தது தெரியவந்ததை அடுத்து சரவணக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.