உடல் நலம் சரியில்லாத முன்னாள் MLA - வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
- கோவை மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக்கின் உடல் நலம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் விசாரித்தார்.
- திமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
- இதனிடையே, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், கார்த்திக்கின் இல்லத்துக்கு சென்று உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
- பூரண நலம் பெற்று, விரைவில் கட்சி பணியில் ஈடுபட வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.