RAC, வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு...; உடனுக்குடன் கைகொடுக்கும் புதிய வசதி

Update: 2022-09-20 08:37 GMT

RAC, வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு...; உடனுக்குடன் கைகொடுக்கும் புதிய வசதி - அடுத்த கட்டத்தில் இந்தியன் ரயில்வே

ரயில்வே துறையில் காகிதம் இல்லா பயணசீட்டு பரிசோதனை திட்டத்தை பயன்படுத்தும் வண்ணம் பல்வேறு வழித்தடங்களில் டிஜிட்டல் முறையிலான பயணிகள் அட்டவணை வெளியிடப்படுகிறது.

தெற்கு ரயில்வேயை பொறுத்தமட்டில் பல்வேறு வழித்தடங்களில் 500 - க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டேப்லெட் உதவியுடன் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரி , அனந்தபுரி , குருவாயூர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் செல்லக்கூடிய அதிவிரைவு ரயில்களில் இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகளின் பயணச்சீட்டை பரிசோதனை செய்து டேப்லெட் உதவியுடன் செயலியில் உடனுக்குடன் காலி இருக்கைகள் குறித்தான விவரங்களை பதிவு செய்யப்படுகின்றன.

இதன் காரணமாக தெற்கு ரயில்வேயில் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் நபர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் ரயிலில் இருக்கைகள் காலி விவரங்கள் இணையதளத்தில் அவ்வப்போது அப்டேட் செய்யபட்டு காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்