கேரளாவில் கனமழை தொடர்வதால் 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
கேரளாவில் கடந்த மூன்று தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனிடையே, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கோழிக்கோடு, கண்ணூர், கோட்டயம், காசர்கோடு மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த மழையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 29 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ள கேரள அரசு, 112 நிவாரண முகாம்களில் 2 ஆயிரத்து 531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.