வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மன்னார் வளைகுடா பகுதியில் வரும் 9ஆம் தேதி வரை சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராமநாதபுரம் மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.